சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J. கிருபாகரன் அனுபவம் - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா? 15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது. அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை
போதகர் கே.ஜே. ஆபிரகாம் இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்திருந்த நாட்கள் அவை. எப்போதும் ஆவிக்குரியவைகளின் மேலேயே நாட்டம் கொள்ளவே மனதில் வேட்கை அதிகரித்திருந்த வேளை அது. ஆலய ஆராதனைகளில் தவறாது ஒவ்வொரு நாளும் பங்கேற்கும் பழக்கத்திற்குள் வாழ்க்கையினை அர்ப்பணித்துக்கொண்டதுடன், ஆங்காங்கே நடைபெறும் ஆவிக்குரிய கூட்டங்களிலும், முகாம்களிலும் பங்கேற்று வேளா வேளைக்கு அவர் தரும் உணவினைப் பெற்றுக்கொள்வதுடன், மேலும் வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன். தினமும் தவறாமல் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிப்பது, அவர் தரும் வார்த்தைகளை வேத வாசிப்பின்போது பெற்றுக்கொள்வது என என்னால் இயன்ற பெலத்தைக் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்திபாரமிட்டுக்கொண்டிருந்தேன்; என்றாலும், யாராவது மூத்தவர்கள் சிலர் இத்தகைய ஓட்டத்தில் எனக்கு உடனிருந்து உதவினால் இன்னும் மேன்மையானவைகளைத் தெரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் பாக்கியமாயமையுமே என்ற எண்ணங்கள் அவ்வப்போது என் நினைவில் வந்து வந்து சென்றுகொண்டிருந்தன. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், இனி என்ன செய்யவேண்டும்? என்ற பெரியதோர் கேள்விக்கு