முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்குத்தத்தமான வாக்கு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 54

வாக்குத்தத்தமான வாக்கு


 

ஒருமுறை சென்னையில் ஜெம்ஸ் மீடியா துறையின் ஆலோசனைக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஜெம்ஸ் தலைவர்கள் சிலரும், முன்னேற்றப் பணித் தலைவர்களும்; அக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். பீஹார் ஜெம்ஸ் மீடியா துறையின் சார்பாக நான் அக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றிருந்தேன். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஜெம்ஸ் அலுவலகத்தில் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின்போது, ஜெம்ஸ் மீடியா துறையின் பல்வேறு காரியங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பங்கேற்றவர்களின் ஆலோசனைக்கு முன் வைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டன. பீஹார் மீடியா துறையின் அலுவலகக் காரியங்களையும், அலுவலகக் கணக்குகளையும் அப்போது நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டில், மீடியா துறை பட்ஜெட்டினை தயாரித்து அளித்திருந்த நான், அதில் வரவேண்டிய மீதமுள்ள தொகையினை மனதில் கொண்டவாறு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பணம் விரைவில் கிடைத்துவிட்டால், குறிப்பிட்ட சில காரியங்களை விரைவில் செய்துமுடித்துவிடலாமே என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். முக்கியமான பல காரியங்கள் விறுவிறுப்பாகப் பேசி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீஹார் மீடியாவைப் பற்றிப் பேச எனக்குத் தருணம் கிட்டியபோது, பட்ஜெட் தொகையில் மீந்திருக்கும் பணத்தைக் குறித்து எடுத்துச் சொன்னேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'நாளைக்கே யாராவது வந்து கொடுத்தா, உடனே உங்ககிட்ட கொடுத்துவிடுகிறேன், என்னை ஆண்டவர் கடன்காரனாக வைக்கமாட்டார்' என்று சிரித்த முகத்தோடு சொன்னார். கூட்டம் முடிந்து பீஹார் வந்து சேர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பணத்தைக் குறித்துப் பேசியதைத் தவிற்திருக்கலாமோ என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருந்தாவது வரும் என்று விசுவாசத்தில் நிற்கிற ஒரு தேவ ஊழியனிடம், 'வேண்டும்' என்று வலுமையாகக் கேட்டுவிட்டதைப் போன்ற அழுத்தம் எனது மனதில் உண்டாயிருந்தது. எனினும், சகோதரரின் வார்த்தையினைக் கனம் பண்ணிய தேவன், ஒரு சில மாதங்களுக்குள், குறிப்பிட்ட அந்தத் தொகையினை சந்தித்தார். ஜெம்ஸ் அலுவலகத்தினிடமிருந்து மீடியா துறையின் அலுவலக வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்ட நான், சகோதரரை சிரித்த முகத்தோடு சந்தித்தேன், 'கடவுள் என்னை யாருக்கும் கடனாளியா வைக்கல' என்றார் சகோதரர். அவர் வாயிலிருந்த வந்த வார்த்தையினை, வாக்குத்தத்தமாக நிறைவேற்றிய தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...