சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?
2015, ஏப்ரல் 12, ஞாயிற்றுக் கிழமை, காலை ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தும் வாய்ப்பு என்னுடையதாயிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு பீஹார், கைமூர் மலை மேல் உள்ள அதௌரா என்னுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படவிருந்ததை முன்னிட்டும், ஆராதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்ததாலும், ஆலய ஆராதனை விரைந்து முடிக்கப்பட்டது. அதௌரா பணித்தளத்திற்கு இரண்டு பேருந்துகள் புறப்பட்டபோதிலும், பேருந்தில் பயணித்து அத்தனை தூரம் என்னால் செல்ல இயலுமா? என்ற கேள்வியுடன் இருந்தேன் நான். எனது பெலவீனத்தைப் புரிந்துகொண்ட சகோதரி ரூபலேகா ஜெபக்குமார், தன்னுடைய வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டார். ஆராதனை, முடிந்ததும், 10.45 மணிக்கு சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அவர்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்; சகோதரிகள் மூவர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேர பயணம். நீண்ட பின் இருக்கையில், நீட்டி நிமிர்ந்து பயணிக்க வசதியாக, தலைக்கு தலையணை ஒன்றையும் சகோதரி முன் இருக்கையிலிருந்து எடுத்துக் கொடுத்தபோது, எனது பயணத்தின் மீது அவருக்கு இருக்கும் கரிசனை என் கண்ணில் பட்டது. அவரது வாயின் வார்த்தைகள், என்னுடைய வசதியை அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது உடலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மதிய நேரம் nருங்கியது, தொடரும் பயணத்தை நிறுத்தாமல் பயணித்துக்கொண்டே உணவருந்தினோம். கொண்டுவந்த இட்லிகளை தட்டில் எடுத்துத் தந்தார் ஒரு சகோதரி. சாப்பிட்டு, நீர் அருந்தி, காகிதத்தால் கரங்களைத் துடைத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு அமர்ந்திருந்தோம். வாகனம் மலையின் மீது ஏற ஏற, தனது நினைவுகளால் கீழே இறங்கிக்கொண்டிருந்த சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் ஊழியத்தின் ஆதி ஆகமத்தின் ஒரு சுருளை விரித்து வாசித்தார்.
'ஜெம்ஸ் ஊழியத்தின் ஆரம்பம்; சொற்ப மிஷனரிகள், ஒரே குடும்பம், ஒரிடத்தில் உணவு என்ற நாட்கள் அவை. இருப்பதைக் கொண்டும், கர்த்தர் கொடுத்ததைக் கொண்டும் திருப்தியாக வாழக் கற்றிருந்த மிஷனரிகள். சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் ஊழியத்தை தீவிரமாகச் செய்துவந்தார்; மலையின் மேல் உள்ள கிராமங்களுக்கு சகோதரர் சென்றுவிட்டால் வீடு திரும்ப பல வாரங்கள் பிடிக்கும். ஊழியத்தில் இத்தனையாய் தனது பெலத்தைச் செலவிடும் கணவர் வீடு வரும்போது, திருப்தியாக சாப்பிடவேண்டும் என்று விருப்பங்; கொண்டிருந்தவள் நான். ஒருநாள், வீட்டில் சாம்பார் சொற்ப அளவே இருந்தது. கணவரை உணவருந்த அழைத்தேன், கொஞ்சமிருந்த சாம்பார் அனைத்தையும் அவருக்கு ஊற்றி உணவு பறிமாறினேன். கணவர் திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்ததும், நானோ சட்னி அரைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட கணவர், 'சாம்பார் இல்லையா?' என்று கேட்டார்; இல்லை, என்றேன். 'சமைக்கிறது நீ, அதுல உனக்கு கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?' என்றார் கணவர்' என்று அந்த நிகழ்வினை எங்குடன் அவர் பகிர்ந்துகொண்டார். ஊழியத்தின் ஆரம்பகால விலைக்கிரையத்தை, ஆகாரத்தில்கூட அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது எனனும் வரிகளை என்னால் அப்போது வாசிக்க முடிந்தது, என் சிந்தையிலும் யோசிக்க முடிந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக