சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்
ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்த நான், அலுவலகக் காரியங்களைப் பற்றிய பேச்சுக்களைத் தொடர்ந்து, தனிப்பட்ட வாழ்க்கையின் சில ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது, தேவன் மனிதர்களுக்குள் வைத்திருக்கும் வரங்களையும், கிருபைகளையும் குறித்த கருத்துக்கள் அவரது வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. தாலந்துதனைப் பெற்ற மனிதன், அதனை தேவனுக்காக பயன்படுத்த எத்தனை கரிசனையாய் இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, தேவன் என்னிடத்தில் தந்திருக்கும் தாலந்துகளுக்கு நான் கணக்கு ஒப்புவிக்கவேண்டுமே என்ற எண்ணம் என் சிந்தையைக் கவ்விப் பிடித்துக்கொண்டிருந்தது. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த சகோதரர், உதாரணமாக தன்னுடைய பிள்ளைகளைக் முன் வைத்துப் பேசத் தொடங்கினார். 'என்னுடைய பிள்ளைகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எனக்குள் இருக்கும் கிருபை சந்ததியாராகிய அவர்களுக்குள்ளும் கடத்தப்பட்டிருக்கிறது, அவர்கள் பயன்படுத்தப் பயன்படுத்த அதன் பலனை வெளியரங்கமாய் காணமுடியும்; அதனைச் செய்யவேண்டியது அவர்கள் பொறுப்பு, அவர்கள் அதனைத் தூண்டிவிட்டால் போதும்' என்று சொன்னார். உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா 59:21) என்ற வசனத்தை நான் அப்போது நினைவு கூர்ந்தேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக