சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
புள்ளியா அல்லது கமாவா
ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென்றுவிடுவார்கள்; சிலரோ விதையாக வருபவர்கள்; அவர்களால் திரும்பிச் செல்லமுடியாது. புள்ளிக்கும் (.) க்கும் (,) வுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளவேண்டும். சிலர் கமா (,) வைப் போல இங்கு சில நாட்கள், அங்கு சில நாட்கள் என்று தொடர்ந்துகொண்டிருப்பார்கள். சிலரோ புள்ளியாக (.) ஒரே இடத்தில் விதையாகிவிடுவார்கள். அது தவறல்ல, குற்றமுமல்ல, தேவன் எவர்களை எவ்விடத்தில் எத்தனை நாட்கள் வைக்க சித்தம் கொண்டிருந்கிறாரோ அத்தனை நாட்கள் வைத்திருப்பார்; எனவே அப்படிப்பட்டவர்களைக் குறித்து நாம் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை. யார் என்ன சொன்னாலும் நான் பீஹாரை விட்டு செல்ல முடியாது, நான் இங்கே விதையாக வந்தவன், என்னுடைய வாழ்க்கை பீஹாரில் ஒரு முற்றுப்புள்ளியாகிவிட்டது என்று சொன்னதுடன், நீங்கள் புள்ளியா, கமாவா என்ற கேள்வியையும் என் முன் வைத்தார்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக