சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
இரட்டை ஆசீர்வாதம்
வேதத்தின்படியான ஓர் விளக்கம் கேட்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். சகோதரர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார், இரண்டு அல்லது மூன்று வெள்ளைக் காகிதங்கள் அவர் எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திற்குக் கீழே இருந்ததை நான் கண்டபோது, 'ஐயோ, இப்பொழுதுதான் எதையோ அண்ணன் எழுதத் தொடங்கியிருக்கிறார், உள்ளே வந்து இடையூறு செய்துவிட்டோமே' என்று தயங்கி நின்றேன். அவரோ, தான் எழுதிக்கொண்டிருந்த அந்த வாக்கியத்தினை மாத்திரம் இடையில் விட்டுவிடாமல் எழுதி முடித்துவிட்டு, பேனோவை வைத்தவராக என்னை நோக்கிப் பார்த்தார். நான் எனது சந்தேகத்தை முன் வைத்தேன், 'அண்ணன், சிலர் தூதர் பாஷை என்று சொல்லப்படுவது பெண் குரலுக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே, அது குறித்து வேதத்தின் நிலை என்ன?' என்று கேட்டேன். அப்போது சகோதரர், நான் கேட்டக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதற்கு முன்னர், மற்றும் ஒரு காரியத்தை என்னிடத்தில் பேசத்தொடங்கினார், 'Satan's offsprings' என்று ஒரு ஊழியர் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். நானோ அதனைக் கண்டதும், அந்த ஊழியரிடத்தில் இது வேதத்தின்படியானது அல்லவே என்று சொன்னேன். சாத்தான் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. தனது எண்ணிக்கையைப் பரப்பிக்கொள்ள அவனால் முடியாது, ஆரம்ப நாட்களில் எந்த எண்ணிக்கையில் அவன் இருந்தானோ அதே எண்ணிக்கையில்தான் இன்றும் இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கோ பலுகிப் பெருகும் பாக்கியத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்றார். அதனைத் தொடர்ந்து, எனது கேள்விக்கும் விடை தந்தார். 'காபிரியேல்' 'மிகாவேல்' என்றே தூதர்களின் பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் 'தூதன்' என்றும் 'தூதனானவர்' என்றுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் சொல்லும் காரியங்களுக்குத் துணையாக வேதவசனங்கள் நிற்கவேண்டும் என்று சொன்னார். தூதர்களின் பாஷை பெண்குரலைப் போல இருக்கும்; என்று சொல்லுவதற்கு வசனத்தில் இடமில்லை என்று சொன்னார். இந்த சத்தியங்களைக் கேட்டதும், 'அண்ணன், இன்றைக்கு எனக்கு இரட்டை ஆசீர்வாதம்' என்று சொன்னவனாக அறையை விட்டு வெளியே வந்தேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக