சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
உறுதிதான் வென்றது
2005-ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது மூத்த மகன் சகோதரர் கோபோர்த் அவர்களின் திருமணம் பீஹாரில் ஜெம்ஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஜெம்ஸ் மிஷனரிகள் மற்றும் விசுவாசிகள் திரளாக திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த பின்னர், அந்த மாதத்தின் ஜெம்ஸ் தமிழ் பத்திரிக்கையான யுத்தசத்தம் பத்திரிக்கையின் ஆயத்தப் பணியில் இருந்த நான், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்து, 'அண்ணன், ஒன்று அல்லது இரண்டு திருமண படங்களை யுத்தசத்தம் பத்திரிக்கையில் போடலாமா?' என்று கேட்டேன். அதனைக் கேட்டதும், கிருபா, இதுவரை எத்தனையோ ஜெம்ஸ் மிஷனரிகளின் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்திருக்கிறது; யாரையாவது யுத்தசத்தம் பத்திரிக்கையில் போட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். இல்லை என பதில் அளித்தேன். அப்படியென்றால், என்னுடைய பிள்ளையின் திருமண படத்தையும் பத்திரிக்கையில் போடவேண்டிய அவசியமில்லை என்றார். அண்ணன், இந்த திருமணத்திற்காக பலர் ஜெபித்திருப்பார்களே, பீஹாருக்கு வர முடியாத பலர் பார்க்க விரும்புவார்களே என்று பல்வேறு காரணங்களை முன் நிறுத்தினேன்; என்றாலும், அவரது உறுதிதான் இறுதியில் வென்றது. ஊருக்கு ஒரு சட்டம், தன் வீட்டிற்கு ஒரு சட்டம் என்று வாழ விரும்பாக சகோதரர் அப்போது எனக்கு ஓரு மாதியாகவே மாறிவிட்டார்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக