சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
சமயம் வரட்டும்
2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாளிலிருந்து, அதன் ஊழியப் பணிகளின் முறைகளையும் மற்றும் அவ்வூழியத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த மற்றும் இளைய மிஷனரிகள் பலரையும் சந்தித்து அவர்களின் ஊழிய அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்றபோதிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது வாலிப வயதில், இவ்வூழியத்தைத் தொடங்கி அதற்கு அஸ்திபாரமிட்ட பல சம்பவங்களை அறிந்துகொள்ள நான் அதிகம் ஆவல்கொண்டவனாகவே இருந்தேன். ஜெம்ஸ் வெளியிடும் 'யுத்தசத்தம்' மாதாந்திர பத்திரிக்கையின் பழைய பிரதிகளை அலுவலகத்தில் கிடைக்கும் சமையங்களில் வாசிப்பதை எனது வழக்கமாகக் கொண்டிருந்தபோது, 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலையங்கத்தின் கீழ் சகோதரர் எழுதிவந்திருந்த கட்டுரைகளை வாசித்து, சகோதரரின் தொடக்க கால ஊழிய அனுபவங்களை அறிந்துகொண்டேன். எனினும், அக்கட்டுரை சில வருடங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. அத்துடன், 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுத்தசத்தம் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஜெம்ஸ் மிஷனரிகளின் சாட்சிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஜெம்ஸ் ஊழியத்திற்குப் புதியவனாயிருந்த நான், ஊழியத்தைப் பற்றி அறிவதிலேயே ஆர்வத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபடியினால், இரவிலும் எனது சொப்பனமாகவும் அது மாறிவிட்டது. ஒருநாள் வீட்டில் இரவு வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, சொப்பனம் ஒன்றைக் கண்டேன்ளூ அதில், சகோதரர் ஒரு புத்தகத்தை எனது கையில் கொண்டுவந்து கொடுத்தார், சகோதரரின் கையிலிருந:து ஆசையோடு அப்புத்தகத்தை வாங்கிய நான், அங்கிருந்து சற்று அகன்று சென்றதும், புத்தகத்தை வாசிககும் ஆவலில் திறந்தேன்ளூ எனக்கோ அதிர்ச்சியே காத்திருந்தது! புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் காலியாக, வெள்ளைக் காகிதங்களாகவே காணப்பட்டன. இப்படி ஒரு புத்தகத்தை ஏன் சகோதரர் எனது கையில் கொடுக்கவேண்டும் என்று எனது சிந்தை சிந்திக்கத் தொடங்க, அது பல நாட்களாக எனது சிந்தையை ஆட்கொள்ள, ஒருமுறை சகோதரர் அலுவலகத்தில் இருந்தபோது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது, நான் கண்ட சொப்பனத்தை சகோதரரிடம் சொன்னேன்ளூ அத்துடன், ஜெம்ஸ் வரலாற்றினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர், 'சமயம் வரட்டும்' என்றார்ளூ அவரது சமயத்திற்கு நான் காத்திருந்தேன்ளூ ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு என்று புரிந்துகொண்டேன்.
www.sinegithan.in
Comments
Post a Comment