சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
அது அவர்கள் விருப்பம்
2006-ம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த ஓர் குடும்பத்தினர், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு வாகனம் ஒன்றை வாங்கும்படியாக ஒரு குறிப்பிட்ட தொகையினை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அப்போது நான் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையிலும், ஜெம்ஸ் வாகனங்கள் துறையில் சகோதரர் ராஜதுரை அவர்களுக்கு உதவியாகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சகோதரர் பீஹார் வந்து சேர்ந்ததும், சகோதரர் ராஜதுரையை அழைத்து, எந்த வாகனத்தை வாங்கலாம் என்று கலந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார்; நானும் உடனிருந்தேன். பல்வேறு வாகனங்களின் தகவல்களை நான் இணையதளத்திலிருந்து சேகரித்து சகோதரரிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அண்ணன் SCORPIO வாங்கினால் நன்றாக இருக்கும், பீஹாரின் சாலைக்கு அதுதான் சரியான வாகனம், வாகனம் தரை மட்டத்திலிருந்து சற்று உயர்ந்தவாறு இருக்கும் என்று நான் ஆலோசனை சொன்னேன். சகோதரரோ, அது நேத்தாக்கள் (அரசியல்வாதிகள்) வண்டியாகிவிட்டது, அதிலே சென்றால் நானும் பிரசங்கியாராக அல்ல, அரசியல்வாதிகளைப் போன்றே பார்க்கப்படுவேன் என்றார். பல்வேறு வாகனங்களைப் பார்த்த பின்னர், INNOVA வாகனத்தை வாங்குவதற்கு சகோதரர் ஒப்புக்கொண்டார். எனினும், இரண்டு காரியங்களை சகோதரர் எங்கள் முன் வைத்தார், ஒன்று அந்தக் குடும்பத்தினர் கொடுத்த தொகைக்குள் வாகனம் வாங்கப்படவேண்டும், இரண்டாவது அவர்கள் விரும்பிய Golden கலரில் வாகனம் வாங்கப்படவேண்டும்.
இவ்விரண்டையும் மனதில் கொண்டவர்களாக, வாரனாசியிலுள்ள இனோவா ஏஜன்சிக்குச் சென்றோம். இனொவா காரின் பல்வேறு மாடல்களைப் பார்த்த நாங்கள், குறிப்பிட்ட தொகைக்குள் அடங்கிய ஓர் மாடலை வாங்கத் திட்டமிட்டோம்; ஆனால், அதிலோ சகோதரர் விரும்பிய வண்ணம் இல்லாதிருந்தது. அந்த வண்ணம் அடுத்த மாடலில் இருந்தது; அந்த மாடலோ குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக இருந்தது. எனவே, வேறு ஒரு கலரில் காரை வாங்கலாமா என்று சகோதரரிடம் கேட்டோம். அதற்கு சகோதரர், 'நான் அந்தக் குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 'இந்தக் கலரில் இதே போன்ற ஒரு வாகனத்தை வாங்குங்கள்' என்று அவர்கள் சொன்னார்கள்; எனவே, அவர்கள் காட்டின கலரிலேயே கார் வாங்கப்பட்டால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும், அந்தக் குடும்பத்தினர் பார்த்தால் அவர்களுக்கும் திருப்தியாக இருக்கும்; இது எனது விருப்பமல்ல, அவர்கள் விருப்பம் என்று சொன்னார். என்ன செய்வதென்று யோசித்த நாங்கள், சதோதரர் விரும்பிய மாடலில், அந்த வண்ணமுடைய ஓர் வாகனத்தைத் தரும்படி ஏஜென்சியிடம் கேட்டுக்கொண்டோம். ஏஜென்சியும், அதற்கு இணங்கி சகோதரர் விரும்பிய மாடலில், சகோதரர் விரும்பிய வண்ணத்தில் ஒரு வாகனத்தை கம்பெனியிடமிருந்து பெற்றுத்தந்தது. மக்களிடம் காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாய் செயல்பட்டுவிடக்கூடாது என்பதில் சகோதரருக்கு இருந்த வைராக்கியத்தின் விளைவாய் வந்தது அந்த இனொவா.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக