சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
குறையல்ல, நிறை
4 April 2014
2003-ம் ஆண்டு, ஜெம்ஸ் கருவந்தியா பணித்தளத்தில் இருந்த ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சகோதரர் ஜேசுதாசன் அப்போது தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராக இருந்தார். என்னுடன் அப்பணித்தளத்தில் சகோ.ஜெபக்குமார் தனராஜ், சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன் மற்றும் சகோதரி லீலா ஆகிய மிஷனரிகளும் ஊழியம் செய்துவந்தனர். சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகவும், சகோ.பெல்வின் ஜெம்ஸ் கோழிப்பண்ணையின் பொறுப்பாளராகவும், சகோ.எட்வட் ராஜன் அப்பணித்தள ஆலயத்தின் போதகராகவும், சகோதரி லீலாவதி மருத்துவப் பணியாளராகவும் ஊழியம் செய்துவந்தனர். இரண்டு வளாகங்களாக இருந்த அப்பணித்தளத்தில், ஒரு வளாகத்தில் சிறுவர் இல்லமும், தொழிற்பயிற்சி மையமும், ஆலயமும் அமைந்திருந்தன. மற்றொரு வளாகத்தில், கோழிப்பண்ணையும் நான்கு வீடுகளும் அமைந்திருந்தன. சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்திலேயே அமைந்திருந்த ஊழியர் இல்லத்தில் தங்கியிருந்தார். மற்றொரு வளாகத்திலிருந்த வீடுகளில் ஒன்றில் நான் தங்கியிருந்தேன், ஒட்டியிருந்த பிற மூன்று வீடுகளில் சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன், சகோதரி லீலாவதி ஆகியோர் தங்கியிருந்தனர். ஜனவரி மாதத்தின் தொடக்க நாட்களில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கருவந்தியா பணித்தள ஊழியங்களைப் பார்வையிடும்படி வருகை தந்திருந்தார். தொழிற்பயிற்சி மையம் மற்றும் சிறுவர் இல்லத்தைப் பார்வையிட்டப் பின்னர், நாங்கள் தங்கியிருந்த வளாகத்திற்கு வந்தார். சகோதரரின் வருகையை அறிந்த நான், குடிப்பதற்கு அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவனாக, அருகிலிருந்த சக மிஷனரிகளிடத்தில் கேட்டேன். அவர்களோ, 'அண்ணன், யார் வீட்டிற்குள்ளும் தீடீரென்று வராமாட்டார், எங்கேயும் எதுவும் சாப்பிடமாட்டார்கள்' என்ற பதிலைச் சொன்னபோது, என்னை அது சளைக்கச் செய்தது. எனினும், சில இனிப்புகளை ஒரு தட்டில் ஆயத்தம் செய்து, தண்ணீரையும் உடன் வைத்துக்கொண்டு வீட்டருகே அவர் வரக் காத்திருந்தேன். எங்கள் வீடுகளை நோக்கி சுமார் ஐம்பது அடி தூரத்தில் அவர் வருவதை அறிந்ததும் நாங்கள் நான்குபேரும், வீடுகளுக்கு வெளியே நின்றவர்களாக அவருக்கு வணக்கம் தெரிவித்தோம். சகோதரர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, நான் எனது வீட்டிற்குள் ஓடி தட்டில் இருந்த இனிப்பையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு முன் நீட்டினேன். சிரித்தவாறு அதனை ஏற்றுக்கொண்டார். அடுக்கியிருந்த இனிப்புகளை கொடுக்காதிருந்தால் கொடுக்காதது என் குறையாயிருந்திருக்கும்; அடுக்கியிருந்த இனிப்புகளை எடுக்காதிருந்தால், எடுக்காதது அவர் குறையாயிருந்திருக்கும்; இவ்விரண்டும் நிறைவானது அன்று.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.(1கொரி 13:10)
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக