முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜி என்றால் ரவ்வை

 

     

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 17

சுஜி என்றால் ரவ்வை

4 April 2014

 

நான் பீஹாருக்கு வந்திருந்த தொடக்க நாட்கள் அவை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை; பீஹார், சிக்கரியாவிலுள்ள ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை காலை 8 மணிக்குத் தொடங்கியது. நானும் குடும்பத்துடன் ஆராதனைக்குச் சென்றிருந்தேன். பாடல்வேளை முடிந்து, ஆராதனை வேளையும் முடிவுற்றது; காணிக்கை வேளையைத் தொடர்ந்து, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அளிக்கவிருக்கும் செய்திக்குக் காத்திருந்தேன் நான். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியினைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமானார். சிக்கரியாவில் ஹிந்தி மொழி பேசுவோருடன், தமிழ் மொழி பேசுவோரும் அதிகம் இருப்பதினால், அங்கு நடைபெறும் எல்லா கூட்டங்களிலும் தமிழில் வழங்கப்படும் செய்திகள் ஹிந்தியிலும், அப்படியே ஹிந்தியில் வழங்கப்படும் செய்திகள் தமிழிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்படும். அந்த ஞாயிற்றுக் கிழமையில், வழக்கமாக சகோதரருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் சகோதரர் பாபு ராஜரீகன் இல்லாததினால், யாரைக் கூப்பிடலாம் என்று தேடிய சகோதரரின் கண்கள் என்னைப் பிடித்தது. 'கிருபா வாங்க' என்று மேடையிலிருந்து என்னை அழைத்தார் சகோதரர். எனக்கோ நடுக்கம் தலைக்கு ஏறியது. இப்போதுதான் பீஹாருக்கு வந்திருக்கிறேன், ஹிந்தி மொழியை இன்னும் சரிவரக் கற்றுக்கொள்ளவில்லையே, இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் சகோதரர் என்னை அழைக்கிறார் என்று எனக்குள்ளே கேள்வி எழும்பியபோதிலும், இருந்த இடத்திலிருந்து எழும்பி மேடைக்குச் சென்றேன். 'அண்ணன்.... நான் எப்படி மொழிபெயர்க்கப்போகிறேனோ....' என்று சந்தேகத்தில் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டேன். அதற்கு பிரசங்க பீடத்திலேயே அவர் கொடுத்த பதில், 'தண்ணிக்குள்ள தள்ளிவிட்டாத்தான் நீச்சல் கத்துக்க முடியும்' என்பதே. சகோதரர் ஹிந்தி மொழியில் பிரசங்கத்தைத் தொடங்கினார், எனக்கோ வார்த்தைகள் நடுங்கியது. அகத்தில் ஏற்படும் நடுக்கத்தை முகத்தில் காட்டாதவாறு மொழிபெயர்ப்பைத் தொடர்ந்தேன். தீடீரென்று 'சுஜி' என்றார் சகோதரர், சிக்கிக்கொண்டேன். அவரது முகத்தைப் பார்த்தேன், அவர் என்முகத்தைப் பார்த்தவாறு, 'நீர் வீட்ல சரியா சமைக்கலன்னு நினைக்கிறேன், அதனாலதான் சுஜி தெரியல, 'சுஜி' என்றால் ரவ்வை என்று மேடையிலேயே கற்றுக்கொடுத்தார். குழுமியிருந்த மக்கள் மக்கள் முகத்தில் என் நிமித்தம் உண்டான சிரிப்பைக் கண்டு நானும் சிரித்துக்கொண்டேன். பிரசங்கம் தொடர்ந்தது, சற்றுநேரத்தில் 'சந்த்' என்றார், நான் 'சந்ததி' என்று மொழிபெயர்த்தேன்; அவரோ சந்த் என்றால் சந்ததி இல்லை நீதிமான் என்று சொன்னார். பிரசங்கம் சீக்கிரத்தில் முடிந்துவிடாதா என்று தொடக்கத்தில் பயந்த என்னை அவரே உதவிக்கரம் நீட்டி இறுதிவரை இழுத்துச் சென்றார். வளரும் தலைமுறையை உருவாக்க, வேண்டும் இத்தகைய தலைவர்கள்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...