முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்ததைக் கொட்டிவிடு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 24

கொடுத்ததைக் கொட்டிவிடு


 

செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் கேள்வி பதில்கள் போன்றவைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்த நான், அதனை முழு உலகத்தினருக்கும் கொண்டுசெல்வது எப்படி என்ற கேள்வியுடன் ஒரு நாள் காலையில் அமர்ந்திருந்தேன்? அப்போது YOUTHLINE (தற்போது www.sinegithan.in என்ற பெயரில் இணையதளம் மாற்றப்பட்டுள்ளது) என்ற வார்த்தை எனது நினைவில் வந்தது. அதனைத் தொடந்து youthline என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் என் மனதில் உண்டானது. அடுத்தநாள் காலையில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரும்படியாக, சகோதரர் ராஜதுரை அவர்களுடன் வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோனிலிருந்து வாரனாசி நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணிசெய்யும் சகோதரர் சுதர்சன்பால் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, youthline என்ற பெயரில் இணைதளம் உருவாக்குவதைக் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். youthline என்ற பெயர் கிடைக்கவில்லை எனவே வேறொரு பெயரை வைக்கலாமா? என்று சகோதரன் கேட்டபோது, இல்லை, youthline என்ற பெயர்தான் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன் நான். எப்படியோ, நாங்கள் வாரனாசி சென்று சேருவதற்கு முன்னர், youthline.in என்ற இணையதளத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார். அதனைத் தொடர்ந்து, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜேஷ் டத்தி அவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவருடைய வார்த்தைகளும் என்னை உற்சாகப்படுத்துவதாகவே அமைந்தன. இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து அதில் எழுதிக்கொண்டுவந்தேன். நான் செய்யும் இக்காரியம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கும் தெரியும்படியாக, ஒரு நாள் சகோதரரைச் சந்தித்து youthline.in இணையதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். இணையதளத்தில் நான் எழுதிய சில செய்திகளையும் சகோதரரிடத்தில் கொடுத்தேன். அப்போது சகோதரர், நல்லது, தேவன் உங்களுக்குக் கொடுத்ததை உங்களோடு அடக்கிவைத்துவிடாமல் உலக்திற்குக் கொட்டிவிடுகிறீர்கள்; இதுதான் நாம் செய்யவேண்டியது என்றார். சகோதரரின் இந்த வார்த்தை என்னை மேலும் செயல்படும்படி உந்தியது. உடனிருப்போருக்குக் கொடுக்கப்பட்ட கிருபைகளை அறிந்து, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உதிர்க்கும் தலைவர்களாலேயே, தலைமுறையினர் தடங்களை உருவாக்குகின்றனர்.

உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். (2தீமோ 1:6)

எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். (லூக். 12:48) 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...