சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
அழைப்பின் இரகசியம்
2005-ம் ஆண்டு, பீஹார் ஜெம்ஸ் வளாகத்தின் வழியாகச் செல்லும் வெளிப்புறச் சாலையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் நின்றுகொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் உண்டாக்கிய கலவரத்தில் விரோதிகள் அவரை முகத்தில் தாக்கினார்கள்; மூக்கிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டிருந்தது. சட்டை எங்கும் இரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்தார் சகோதரர். ஒருபுறம், தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர், இரத்தம் படிந்த அவரது ஆடைகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாசலுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது, ஜெம்ஸ் அலுவலகத்தின் முன் இருந்த பலா மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து சுற்றி நின்ற ஜெம்ஸ் உடன் ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் சகோதரர்; அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன். தன்னைச் சுற்றிலும் பயந்தவாறு நின்றுகொண்டிருந்த பல ஊழியர்களின் காதுகளை நோக்கி அவரது வாயின் வார்த்தைகள் வாழ்வின் பாடங்களாகப் பாய்ந்துகொண்டிருந்தன; கூட்டத்தில் அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். எதிரியின் தாக்குதல்கள் சரீரத்தைக் காயப்படுத்தலாம், ஆனால் நமது அழைப்பை நிலை குலையச் செய்துவிடக்கூடாது என்று ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று, தன்னைத் தாக்கியவர்களை மனதில் வைத்தவாறு, 'அவங்க என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும்; ஈசாக்கைப் போல பலிபீடத்தில் வைக்கப்பட்டு திரும்ப எடுக்கப்பட அல்ல, பலியாக மாறிவிடவே நான் பீஹாருக்கு வந்தேன்' என்றார். சகோதரரின் காயங்களைக் கண்டு மனதில் நொந்துபோன நெஞ்சோடு நின்றுகொண்டிருந்த பலருக்கு, அவரது வாயிலிருந்து புறப்பட்ட இந்த வாக்கியம், மருந்தானது மாத்திரமல்ல, காயங்கள் நம்மை என்ன செய்யும் என்று தங்களைப் பெலப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நெஞ்சதனை மரத்துப்போகச் செய்தது. என்னுடைய இதயத்திலோ, இந்த வார்த்தைகள் பசுமரத்தில் ஆணியால் எழுதப்பட்டதைப் போல பொறிக்கப்பட்டது. ஆறுதல் பெறும் நிலையிருந்த அவர், மற்றவர்களுக்கு ஆறுதலாகிப்போனது அழைத்தவரின் பெலத்தால் அவருக்குள் இருந்த அழைப்பின் இரகசியம்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக