சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
'எனது டேபிள் கிளீனா இருக்கு'
ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊழியத்தினிமித்தம் மறுநாள் அவர் வெளியூர் புறப்படவேண்டியதிருந்தபடியினால், முந்தைய தினமே ஜெம்ஸ் மீடியா துறையின் அலுவலக பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவரைச் சந்திக்கச் சென்றேன். சகோதரர் தனது வேலையில் கருத்தாயிருந்தார். உள்ளே நுழைந்ததும், 'உட்காருங்கள்' என்று சொல்வது சகோதரரின் பண்பாடு. அத்தனை வேலைகளின் மத்தியிலும், 'உட்காருங்கள்' என்று என்னையும் கேட்டுக்கொண்டார். அமர்ந்தவாறு பேசத் தொடங்கினேன். சகோதரரைச் சந்திக்கச் செல்லும்போது, என்னென்ன பேசவேண்டும் என்பதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்வதும், அவர் சொல்பவற்றை எழுத ஆயத்தமாகவும் செல்வது எனது வழக்கம். இல்லையெனில், பலமுறை நான் அவர் பேசும் வார்த்தைகளிலேயே முழ்கி, நான் பேசவேண்டுமென்றிருந்தவைகளை பேசாமல் மறந்துவந்திருக்கிறேன் அல்லது அவர் சொன்னவைகளை மறந்துவிடுவேன். அப்படியே, அன்றும் எனது கையிலிருந்த துண்டு காகிதத்தின் அலுவலகத்தைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் தரும் ஆலோசனைகளையும் கையிலிருந்த காகிதத்தில் நான் எழுதிக்கொண்டேயிருந்தேன். அது ஒரு மாலை நேரம்; வழக்கமாக அலுவலகத்திலிருந்து சகோதரர் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தார். சந்திப்பை முடித்துவிட்டு, நான் எழுந்தேன். சகோதரரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது, சகோதரர் என்னை நோக்கி: நாளை நான் வெளியூர் கிளம்பவேண்டும், எனவே இன்றே எனது மேஜையில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டேன்; 'எனது டேபிள் கிளீனா இருக்கு' என்று கண்களால் மேஜையைப் பார்த்தவாறும், இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறும் சொன்னார். அவரது செயலைக் கண்ட நான் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். இந்த வார்த்தையை அவரது வாயிலிருந்து எனது காதுகள் வாங்கிய பின்னர், பல நாட்கள் அவரை தொடர்ந்து கவனித்த நான், அந்த வார்த்தை அவரது வாயில் உள்ளது அல்ல, அவரது வாழ்க்கையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக