சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
மனப்பூர்வமான மன்னிப்பு
2005-ம் ஆண்டு சமூக விரோதிகள் உருவாக்கிய பிரச்சனையில், ஜெம்ஸ் வளாகத்தைச் சுற்றிய கிராமத்தினர் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். தேர்தலில் ஆதாயம் பெற விரும்பிய வாக்காளர் ஒருவர், ஜெம்ஸ் ஊழியங்களுக்கு விரோதமாக செயல்பட்டு தனது பெயரைப் பெருக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெம்ஸ் ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டனர்; நானும் தாக்கப்பட்டேன். கிராமத்து மக்களில் சிலர் கோர்ட்டில் எங்களுக்கு விரோதமாக வழக்கு தொடர்ந்தனர். அதனால் அவ்வப்போது, கோர்ட்டிற்கு சென்று திரும்பும் நிலை உருவானது. தீர்ப்பு வரும் நாள் நெருங்கியது; அந்நாளில் கோர்ட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வர, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் அடிக்கப்பட்ட ஊழியர்கள் சிலரும் கோர்ட்டிற்குச் சென்றிருந்தோம். விசாரிக்கப்படும் நேரம் வரும் வரை சகோதரருடன் கோர்ட் வளாகத்திற்கு வெளியிலேயே வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தோம். நேரமாகிக்கொண்டேயிருந்தபடியினால், அருகிலிருந்த கடைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். தீர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு விரோதமாகவே அமைந்துவிட்டதை அப்போது நாங்கள் அறிந்திருந்தோம். அப்போது, நீதிபதி விசாரிக்கும் நேரத்தில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை ஊழியர்களாகிய எங்களுக்கு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவர்களை மன்னிப்பது நமது கடமை' எனவே, நீதிபதி என்ன கேட்டாலும், 'தண்டணை வேண்டாம் மன்னித்துவிடுங்கள்' என்பதையே பதிலாகச் சொல்லும்படி சகோதரர் சொல்லிக்கொண்டிருந்தார். சகோதரர், வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருந்தார். அப்போது, ஒரு தாய் கண்களில் கண்ணீரோடு சகோதரரைச் சந்திக்க வந்தார். அவர் யாரென்பதை நான் அறியாதவனாயிருந்தேன், எனினும், இரு கரங்களைக் கூப்பியவாறு சகோதரரிடம் செய்த தவற்றிற்காக மன்னிப்பு கேட்பதை அந்தத் தாயின் செய்கையிலும், வார்த்தைகளிலும் கண்டுகொண்டேன். கோர்ட் கூடியது, சகோதரர் அழைக்கப்பட்டபோது, 'தான் அவர்களை மனப்பூர்வமாக மன்னிப்பதாகவும், தண்டணை வழக்கவேண்டாம்' என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். சகோதரரைத் தொடர்ந்து ஊழியர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டோம்; நீதிபதி ஒவ்வொருவராக எங்களை அழைக்க, நாங்களும் சகோதரர் கற்றுத்தந்த பிரகாரம், எதிராளிகளை மன்னிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். என்னை அழைத்த நீதிபதி, 'உன்னை அடித்தது இவன்தானா? கையில் என்ன வைத்திருந்தான்? எப்படி அடித்தான்? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்? மன்னித்துவிடுங்கள் என்று சகோததரர் கற்றுத் தந்தது போலவே நானும் மாறுத்தரம் சொன்னேன். விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பினோம். தொடர்ந்து, கிறிஸ்துவின் அன்பினை வெளிக்காட்டும் பொருட்டு, வெகுமதிகளுடன் அவர்களது இல்லங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்தோம். சகோதரருடன் கிராமத்திற்குள் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்தது எனக்கு புதியதோர் அனுபவம். கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியே நம்மை வெளிக்காட்டவேண்டும் என்று சகோதரர் செய்த செயல், மனப்பூரணமான மன்னிப்பை ஊழியர்களாகிய எங்கள் உள்ளங்களில் அனுபவிக்கச் செய்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக