சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்
2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமதிக்கவில்லை, தமிழ்நாடு கொண்டுபோகலாமா? என்று நாங்கள் அவரிடத்தில் கேட்டபோதும், பதில் ஏதும் சொல்லவில்லை, நான் கொடுக்கிற இந்த மருத்துவத்தில் சரியாகிவிடும் என்று சொன்னார். நாங்கள் பயந்தவர்களாக மருந்துக்களை வாங்கிக்கொண்டு, ஜெம்ஸ் மருத்துவனையை நோக்கி வந்துகொண்டிருந்தோம். அங்கிருந்த மருத்துவரிடத்தில் விபரத்தைச் சொல்லி, படுக்கையில் இருந்தவாறு அந்த மருந்துகளைக் கொடுக்கச் சொன்னோம். ஆனால், அப்போது ஜெம்ஸ் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அந்த மருந்துகள் பெரியவர்கள் சாப்பிடக்கூடியது, குழந்தைகளுக்குரியது அல்ல என்று என்று எங்களிடம் சொன்னார்; செவிலியர்கள் துணையுடன் தினமும் ஊசிகளைப் போட்டுவந்தோம். இத்தகைய நோய் நீரின் வழியாகவே பரவுகின்றது என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒருநாள் மருத்துவமனைக்கு வந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், எங்களைப் பார்த்து, 'தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்' என்ற வசனத்தைச் எளிதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். இந்த நேரத்தில் இந்த வசனத்தை ஏன் சொன்னார் என்று என்னால் புரிந்துகொள்ள இயலாதிருந்தது. எனினும், நம்மைக் காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட நான், செலவின் மத்தியிலும் உடனே ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை வாங்கி வீட்டில் பொருத்தினேன். உள்ளத்தை மட்டுமல்ல, உடலைக் காக்கும் பொறுப்பும் ஊழியனே உனக்கு உண்டு என்பது அன்று நான் கற்றுக்கொண்ட பாடம்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக