முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தகாரத்தின் தந்திரம்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 12


அந்தகாரத்தின் தந்திரம்

30 March 2014

 

பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில் பங்கேற்றனர், சாதுக்கள் கூட்டம் நடந்த மைதானமோ காலியாகக் கிடந்தது. வெகு தொலைவிலிருந்து கால்நடையாகவே மக்கள் ஜெம்ஸ் கூட்டங்களுக்கு நடந்து வந்திருந்தனர். ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டால், நாங்கள் பாதுகாப்பு தர முடியாது என்று காவல்துறையினர் எச்சரித்திருந்த நிலையில்; சகோதரரின் செய்தியினால் தொடப்பட்ட பாட்னா ஐ.ஜி ஒருவரின் மனைவி அக்கூட்டத்தில் தினந்தோறும் பங்குபெற்றார்; அவருடன் காவல்துறையினர் பலரும் பாட்னாவிலிருந்து வருகை தந்திருந்தனர். ஐ.ஜி-யின் மனைவிக்கு பாதுகாப்புக் கொடுப்பதுடன், சகோதரருக்கும் பாதுகாப்பு தருவதில் முனைந்து நின்றனர் காவல் துறையினர். நான் வழக்கம்போல, மேடையின் மீது கண் வைத்தவனாக, மைதானத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தேன். முதல் நாள் கூட்டம் முடிந்தது, மேடையிலிருந்து சகோதரர் கீழே இறங்கும்போது, அவரது கால்களைத் தொடுவதற்காக, 'பாபா' 'பாபா' என்ற சத்தத்துடன் ஜனங்கள் மேடையை நெருங்கினர். இதனைக் கண்ட நான், சில வாலிபர்களை உடன் வைத்துக்கொண்டு, வாகனத்தை மேடைக்கு அருகே வரச்சொல்லி, பாதுகாப்பு வளையத்துடன் சகோதரரை வாகனத்தில் ஏற்றும் நிலை உண்டானது. சகோதரர் பாதுகாப்பு வேண்டாம் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மறுத்த போதிலும் கூட, சகோதரரின் வாகனத்திற்கு முன்னே வலுக்கட்டாயமாகச் சென்றது ஐ.ஜி அனுப்பியிருந்த காவல்துறையின் பாதுகாப்புப் பணி வாகனம். என்மேல் கரிசனை கொண்டு, அந்த ஐ.ஜி இப்படிச் செய்கிறாரே என்று சொல்லிக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.

இரண்டாம் நாள் கூட்டங்களின் போது, ஆடியோ கேசட்டுகளுடன், சகோதரரின் படம் அடங்கிய காலண்டர் ஒன்றையும் விற்பனைக்கு நாங்கள் வைத்திருந்தோம். சகோதரரின் படத்தைப் பார்த்த கூட்டத்தின் மக்கள். பாபா, பாபா, என்று முண்டியடித்துக்கொண்டு காலண்டரை வாங்கி முடித்தனர். படைமுயற்சிக் கூட்டங்களில் வழக்கமாகச் செய்யப்படுவதைப் போன்று, சகோதரரின் செய்திக்கு முன், இயேசுவின் சிலுவைக் காட்சியைச் சித்தரிக்கும் திரைப்படத்தினைக் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தோம்; மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மைதானம் இருளாயிருந்த நேரத்தில், மைதானத்தின் பின்புறத்திலிருந்து கூச்சலும், குழப்பமுமான சண்டையின் சத்தம் கேட்டது. மைதானத்தின் பின்பபகுதிக்குச் சென்று பார்த்த நான், அங்கு சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். ஜெம்ஸ் புத்தக நிலையத்தில் இருந்த ஆடியோ கேசட்டுக்களை பலர் திருடிக்கொண்டுச் சென்றனர். மேடையில் அமர்ந்திருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் ஓடி வந்தேன்; 'அண்ணன், பின் பகுதியில் சண்டை நடக்கிறது, லைட்டை ஆன் பண்ணுவோமா?' என்று கேட்டேன். சகோதரர் சற்றும் யோசிக்காமல், 'கிருபா, கூட்டத்திற்குத் தடை இப்படித்தான் வரும், நீங்க பதட்டப்படாமல் அமைதியாக இருந்து பாருங்க, எல்லாம் கொஞ்ச நேரத்தில சரியாகிவிடும், சத்துருவின் இந்த தந்திரத்திற்கு நாம் அடிபணிந்துவிடக்கூடாது' என்று ஆலோசனை கொடுத்தார். நான் மேடையிலிருந்து இறங்கியபோது, சற்று நேரத்தில் அமளி அனைத்தும் அடங்கியது. சகோதரர் மீண்டும் தனது பிரசங்கத்தைத் தொடங்கினார். அந்தகாரத்தின் தந்திரத்தை அன்று நான் அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...