முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 7


இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்தேன். 'அண்ணன், தொழிற்பயிற்சி மையத்திற்குப் பொருட்கள் வாங்க சகோதரர் ஜேசுதாசன் நேற்றைய தினமே சென்றுவிட்டார், ஒன்றரை லட்சம் ரூபாயை பணமாகக் கொண்டுவரும்படி என்னிடம் கூறினார், இன்று இரவு நான் ரயிலில் பாட்னா புறப்படுகிறேன்' என்று சொன்னேன். இதனைக் கேட்டதும் சகோதரர், 'கிருபா, பணமாகவா கொண்டுபோகப் போகிறீர்கள், D.D எடுத்துக்கொண்டு போகக்கூடாதா? இது தமிழ்நாடு அல்ல பீஹார்' என்று சொன்னார். நானோ, 'பணமாக இருந்தால்தான் வாங்குமிடத்தில் விலையைக் குறைத்துச் கொடுக்க வசதியாயிருக்கும்' என்றேன். ஆனால் சகோதரரோ, 'இத்தனை பெரிய தொகையை ரயிலில் கொண்டு செல்வதை தவிர்ப்பது, நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது, என்றாலும், நீங்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கொண்டு செல்லுங்கள்' என்று மறுப்புடன் கூடிய அனுமதியினைக் கொடுத்தார். பணத்தை வாங்கிய நான் அதனை ஓர் சிறிய பையில் வைத்தவனாக, நள்ளிரவில் டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் ரயில் ஏறினேன். நான் முன்பதிவு செய்யாதிருந்த நான் டிக்கட் பரிசோதகரைச் சந்தித்தபோது, அவர் காலியாகக் கிடந்த ஓர் படுக்கையை எனக்குக் கொடுத்தார். பணப் பையைத் தலையணையாக வைத்தவாறு நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அதிகாலை சுமார் 1 மணிக்கு மீண்டும் வந்த டிக்கட் பரிசோதகர் என்னைத் தட்டி எழுப்பினார்; என்னை இறங்கச் சொல்லிவிட்டு, அந்தப் படுக்கையை வேறு ஒரு பெண்ணிற்குக் கொடுத்தார். அருகே காலியாகக் கிடந்த வேறு ஒரு படுக்கையில் நான் படுத்துக்கொண்டேன். அதிகாலை 1.30 மணிக்கு ரயில் பெட்டியினுள் ஓரே சத்தமும், கூச்சலும் உண்டானதைக் கேட்டு கண் விழித்தேன். காரணம் அறிந்தபோது, நான் முன்பு படுத்திருந்த படுக்கையில் இருந்த பெண் வைத்திருந்த பை, பணம் அனைத்தும் திருடப்பட்டிருந்தது. கர்த்தர் சரியான நேரத்தில் என்னை அந்த படுக்கையை விட்டு அகற்றியதினால், ஸ்தாபனத்தின் பணம் காப்பாற்றப்பட்டதை நினைத்து துதித்தேன். அது தீமையல்ல, கர்த்தர் செய்த நன்மை என்பதை அறிந்துகொண்டேன். இதனை முன்னறிந்தவாறு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்ன வார்த்தைகள் அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தன. ஆலோசனையை கேட்காததினால், ஆபத்து என்னை உரசிவிட்டுச் சென்றது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...