முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்லெடுத்த சிறு கைகள்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

                              

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 47

கல்லெடுத்த சிறு கைகள்


 

23 ஜுலை 2014 அன்று காலை சுமார் 11.10 மணி, செப்டம்பர் 2014 மாதத்தின் ஜெம்ஸ் சத்தம் பத்திரிக்கையில் வெளிவரவிருக்கும் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் எழுதிய 'திருப்தியான வாழ்வு' என்ற செய்தியினைக் காட்டுவதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். அதனைக் கையில் வாங்கிக்கொண்ட அவர், திடீரென, அன்று காலை ஜெம்ஸ் வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் தான் பகிர்ந்துகொண்ட தியானச் செய்தியை என்னுடன் பகிர்ந்துகொள்ளத்தொடங்கினார். 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' என்று இயேசு சொன்னது எப்போது? என்று என்னிடத்தில் சகோதரர் கேட்டபோது, பதில் ஏதும் நான் சொல்லாமல், அத்தனையும் அவரிடமிருந்தே வெளிவரட்டும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லப்போகும் வேத தியானத்தைக் கேட்க ஆயத்தமானேன். அப்போது அவர்: விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் கல்லெறியும்படி இயேசுவினிடத்தில் கொண்டுவந்த சம்பவத்தைக் குறித்து (யோவான் 8:3-9) பேசிக்கொண்டிருந்தார். ஸ்திரீயை இயேசுவுக்கு முன்பாக நிறுத்தி, நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறியப்படவேண்டும் என்று மோசேயின் வார்த்தைகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, இயேசுவோ, 'உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்' என்று சொல்லி, குனிந்து தரையிலே எழுதினார். அப்போது, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் (யோவா 8:9) என்று வேதத்தில் போடப்பட்டிருக்கின்றதே. ஒருவேளை, பெரியோர் தங்கள் பாவங்களை உணர்ந்து போயிருக்கலாம்; ஆனால், சிறியவர்களும் அங்கு கல்லெறிய வந்திருந்தார்களே; சிறியவர்கள் அங்கு வந்ததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். பெரியவர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே செய்யும் சிறுவர்கள் இவர்கள் என்று சொன்னார். என்னவென்றும், எதற்கென்றும் தெரியாது ஆனால், பெரியவர்களின் செய்கைகளைப் பார்த்து அப்படியே செய்பவர்கள் அவர்கள் என்று சொன்னர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், நாம் என்ன செய்கின்றோமோ அதைத்தான் நம்மைத் தொடருவோரும் செய்வார்கள்; எனவே, நாம் நமது செய்கைகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார். நாம் பாதையில் நடப்பவர்கள் மாத்திரமல்ல, பாதை காட்டுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சகோதரரின் சந்திப்பு நினைப்பூட்டியது.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் (1கொரி. 11:1,2) என்ற பவுலின் வார்த்தைகளை நானும் சொல்லத் தகுதியாகவேண்டுமே என அப்போது நினைத்தேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...