முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 14

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

1 April 2014

 

ஒருமுறை, பாட்னாவில் நடைபெறவிருந்த IMPACT ஊழியர் கருத்தரங்கு கூட்டத்திற்கு பகல் 12:30 –க்கு வளாகத்திலிருந்து புறப்படவேண்டும் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லியிருந்தார். உடன் ஊழியர்களாகிய நாங்கள் ஜெம்ஸ் வளாகத்தினுள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தோம். 12.15-க்கு ஓட்டுநர் டெம்போ டிராவலர் வாகனத்தைக் கொண்டு வந்தார். நாங்கள் எங்கள் பொருட்களை வாகனத்தில் வைத்தவாறு, சகோதரரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தார் சகோதரர். ஓர் சிறிய ஜெபத்துடன் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்; வாகனம் புறப்பட்டது. ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசலிலிருந்து வாகனம் சுமார் பத்து அடி வெளியே சென்றதும், 'அண்ணன், அலுவலகத்தில் டீசல் போடுவதற்கான சீட்டு வாங்க மறந்துவிட்டேன், உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றேன்' என்று ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். அதனைக் கேட்ட சகோதரர், '12.30 –க்கு புறப்படவேண்டுமென்றால், அனைத்தும் அதற்கு முன்னரே ஆயத்தமாயிருக்கவேண்டும், டீசல் போடுவதற்கு நான் பணம் தருகிறேன்' என்று சொன்னார். சிக்hரியாவிலிருந்து ஏழு கி.மீ தொலைவிலுள்ள டெஹ்ரி ஆன் சோன் சென்றடைந்ததும், அங்கிருந்த பெட்ரோல் பல்க் ஒன்றில் வாகனத்திற்கு டீசல் நிரப்பினோம், டீசலுக்கான ரூபாய் 1500 ஐ சகோதரரே கொடுத்தார். தொடர்ந்து, வழியில் சென்றுகொண்டிருக்கும்போது, 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார், நாங்களும் சரி என்று சொன்னோம். சாலையோரமிருந்த டீ கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினோம், அனைவரும் டீ குடித்துத்கொண்டிருந்தோம், சகோதரரோ 'எனக்கு டீ வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அண்ணன் நீங்கள் ஏன் டீ குடிப்பதில்லை என்று கேட்டதற்கு, சில விளங்கங்களையும் கொடுத்தார். நாங்கள் டீ குடித்து முடித்ததும் அதற்கான பணத்தை அவரே கொடுத்தார். அண்ணன், அலுவலகத்தில் வாங்கிய பணம் இருக்கிறது என்று நான் கொடுக்க முயற்சித்தபோதிலும், 'டீ குடிக்க நான்தானே உங்களை அழைத்தேன்' என்ற பதிலோடு பணத்தை எடுத்து நீட்டினார். பாட்னா கூட்டங்களை முடித்து ஜெம்ஸ் வளாகம் வந்து சேர்ந்தோம். செலவீனங்களை கணக்குப் பார்த்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க நான் ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, சகோதரர் டீசலுக்கு ரூபாய் 1500 கொடுத்ததை நினைவில் கொண்டு, அவரது அலுவலகத்திற்குச் சென்று அந்த 1500 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட முயன்றேன், ஆனால், சகோதரரோ வாங்க மறுத்துவிட்டார். 'இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்' என்று அன்போடு ஓர் பாடத்தைக் கற்றுக்கொடுத்து அனுப்பினார்.



www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...