சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
தேவையற்ற உதவி
ஒருமுறை மீடியா துறையின் அலுவலக கூட்டத்திற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் அலுவலக அறைக்கு அழைக்கப்ட்டோம். மீடியா துறையில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் குறிப்பிட்ட சமையத்திற்கு கூட்டத்திற்காக சகோதரரின் அறையைச் சென்றடைந்தோம். ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. மீடியா துறையின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும், பணிகளைக் குறித்தும் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஊழியர்களாகிய எங்களிடத்தில் துறையைச் சார்ந்த கருத்துக்களை சகோதரர் கேட்டபோது, நாங்களோ, 'மீடியா துறைக்கு இன்னும் பல்வேறு உபகரணங்கள், அவைகளை வாங்கினால் இன்னும் நன்றாக காரியங்களைச் செய்ய முடியும் என்றும், புகைப்டக் கருவிகள், வீடியோ கேமராக்கள், மற்றும் வெளிப்புற படப்பிடிப்பிற்குத் தேவையான பொருட்கள் போன்றவை தற்போதைய அத்தியாவசியத் தேவைகள் என்று சகோதரரிடத்தில் எடுத்துச் சொன்னோம். எங்களது வார்த்தைகளைக் கேட்ட சகோதரர், மீடியா துறையினை நடத்த அநேக பொருட்களும், பணமும் தேவப்படுகின்றது, மற்ற துறைகளுக்கு ஆகும் செலவினங்களைவிட பன்மடங்கு மீடியாவில் செலவிடவேண்டியிருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து எங்களை நோக்கி: சில நாட்களுக்கு முன்பாக என்னைச் சந்தித்த ஓர் நபர் இங்கு நடைபெறும் ஊழியங்களுக்காக பண உதவி கொடுத்து உதவுவதாக என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார்; அவரது நோக்கமோ ஜெம்ஸ் ஊழியத்தின் தரிசனத்திற்குத் தூரமாயிருந்தது. இதனை அறிந்த நான் அவரது உதவியினை வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டேன். நம்மை தரிசனத்தை விட்டு விலகச் செய்கிற மனிதர்களைக் குறித்தும், அவர்கள் செய்கிற உதவிகள் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், பணித்தளத்தில் நடைபெறும் பணிகளுக்காக யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனைச் செலவழிக்கின்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். மிகுந்த தேவையுள்ள நேரமாயிருந்தாலும், தரிசனத்தை விட்டு விலகச் செய்வோரின் உதவி தேவையற்றது என்று சொன்னதுடன், மீடியா துறையின் தேவைகளுக்காக ஜெபியுங்கள் என்ற ஆவிக்குரிய ஆலோசனையை விடுத்தார். அதனைத் தொடர்ந்து எங்களிடத்தில் நிலவியது அமைதிதான்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக