சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
'இது ரொம்பா டேஞ்சர்'
ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் பணியாற்றும் நான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் கட்டுரைகளையும், செய்திகளையும் அதிகம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவன். அத்தோடு, சகோதரரின் எழுதும் பாங்கினை அதிகமாக காணும் வாய்ப்பு எனக்குக் கிடைதுமிருக்கிறது. அதுமாத்திரமல்ல, பிற இதழ்களில் வெளியான, சகோதரர் வாசித்துப் பயன் பெற்ற கட்டுரைகளையும் சில நேரங்களில் என்னிடத்தில் சகோதரர் கொடுப்பது வழக்கம். வெளிநாளுகள், வெளியூர்களுக்கு ஊழியத்தின் நிமித்தம் சென்று திரும்பும்போது கொண்டுவரும் பல ஊழியர்கள் எழுதிய புத்தகங்களையும் சகோதரர் என்னிடத்தில் கொடுக்கும்போது, ஆசையுடன் அதனை நான் பெற்றுக்கொள்ளுவேன். வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால், எழுத்தினாலே சகோதரருடன் அதிகம் இணைந்திருந்தேன். எழுத்துக்கு சகோதரர் கொடுக்கும் முன்னுரிமையையும் நான் நன்கு அறிந்தவன். சகோதரரின் செய்திகளை கட்டுரைகளை கணணியில் நான் அச்சடித்துக் கொடுக்கும்போது, pசழழக வாசிக்கவேண்டுமா? என்று கேட்பார்; ஆம் என்று நான் சொல்லிவிட்டால், அத்தனை கரிசனையாய் அதனை சகோதரர் திருத்தித் தருவார். ஒருமுறை என் எழுத்துப் பணியினைக் குறித்து சகோதரரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் நான் எதையாவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை அவரிடத்தில் தெரிவித்தேன். பல்வேறு தலைப்புகள் இன்னும் எழுதப்படாமல், கிடப்பில் உள்ளதையும், அதனைக் குறித்த அழுத்தம் எப்போதும் உள்ளத்தில் அதிகரித்துக்கொண்டே இருப்பதனையும் சகோதரரிடம் தெரிவித்தேன். அப்பொழுது, சகோதரர் தன்னுடைய எழுத்துப் பணியினைக் குறித்த ஓர் சிறிய அறிமுகத்தை எனக்கு எடுத்துச் சொன்னார். நான் எழுதுபவன், ஆனால் எழுதிக்கொண்டே மாத்திரம் இருப்பவனல்ல. எப்போது, என்ன எழுதவேண்டுமோ, அப்போது அதனை எழுதிவிட்டு, பின்னர் பிற பணிகளின் செய்யத்தொடங்கிவிடுவேன் என்றார். அவருடைய அறிமுகம் எழுத்துப் பணியில் நான் கடைபிடிக்கவேண்டிய சில நடைமுறைகளைக் கற்றுத்தந்தது. எழுதும்போது மிக மிக அமைதியான சூழ்நிலையினை விருப்புகிறவன் நான்; அப்போது வரும் இடையூறுகளைத் தாங்கிக்கொள்ள நான் அதிகமாக ஆவிக்குரிய பெலனை பிரயோகப்படுத்தவேண்டியதிருக்கும் என்றேன். மேலும், 'பெண்ணை விட்டாலும், pநn-ஐ விடமுடியாது' என்று அடுக்குத்தொடராய்ச் சொன்னேன். எனது வாயிலிருந்து இந்த வார்த்தை பிறந்ததும், உடனே சகோதரர் 'இது ரொம்ப டேஞ்ஜர்' என்றார்; எனக்கும் ஆபத்து அப்போது புரிந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக