முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெடிகுண்டு, வெடிகுண்டு

 

    

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 16

வெடிகுண்டு, வெடிகுண்டு

3 April 2014

 

தமிழ்நாட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மேடையில் முழங்கும் செய்திகளுடன், அவர் மற்றோரை எச்சரிக்கும் காரியங்களையும் குறித்து அறிந்த நான், அது குறித்து விளக்கமாக அவரிடத்தில் விடை பெற விரும்பினேன். ஒரு முறை தமிழ்நாட்டில் கூட்டங்களை முடித்துவிட்டு பீஹார் வந்து சேர்ந்தார் சகோதரர். அது ஓர் காலை நேரம், மீடியா துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வந்து அமர்ந்தார். அவரது அறையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்திலேயே இருந்த எனது அலுவலக இருக்கையில் அமர்ந்திருந்த நான், எவரும் அவரைச் சந்திக்கக் காத்திருக்கின்றனரா? அல்லது அவர் ஏதாவது அத்தியாவசியமான வேலையைச் சகோதரர் செய்துகொண்டிருக்கின்றாரா என்று என்னுடைய இருக்கையிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன். அவரைச் சந்திக்க இது சரியான நேரம் என்பதை உணர்ந்த நான், அவரது அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். 'Praise the Lord' என்றவாறு, 'அண்ணன் உங்களிடத்தில் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும்' என்று சொன்னேன்; தராளமாக என்று எதிர் இருக்கையில் அமரும்படி வலது கரத்தை இருக்கையை நோக்கி நீட்டினார். இருக்கையில் அமர்ந்த நான், 'அண்ணன், ஆசீர்வாத செங்கல்கள் விற்பனை, தங்கச் சாவி விற்பனை, பங்காளர் திட்டம் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் ஏமாற்றப்படுவதைக் குறித்து திறந்த வெளி மைதானத்தில் நீங்கள் பேசியதாகக் கேள்விப்பட்டேன்; அப்படிச் செய்பவர்களிடம் நீங்கள் தனியாக சொல்லலாமே, ஏன் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும்? என்ற கேள்வியை முன்வைத்தேன். அதற்கு சகோதரர், தம்பி, யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால், கிறிஸ்தவ மக்களிடையே தவறாகக் காணப்படும் காரியங்களை நான் அறிந்திருக்கிறேன், சாலையில வெடிகுண்டு இருந்தா நீங்க என்ன செய்வீங்க? வெடிகுண்டு வச்சது யாருன்னு தேடுவீங்களா? அல்லது அது வெடித்து யாரும் இறந்துவிடக்கூடாது என்று அவ்வழியே வருவோரை வெடிகுண்டு, வெடிகுண்டு என்று எச்சரிப்பீர்களா? என்று கேட்டார்; எச்சரிப்பதுதான் என் முதல் வேலையாயிருக்கும் என்றேன் நான்; சரியாகச் சொன்னீர்கள்; அதைத்தானே நானும் செய்துவிட்டு வருகிறேன் என்றார். குண்டு வைத்தவர்களை நாம் தேடிக்கொண்டிருந்தால், குண்டு வெடித்து இறப்போரின் எண்ணிக்கைக்கு நாம் பொறுப்பாகிவிடுவோமே என்றார். ஆம், ஊரைக் காப்பதுதான் ஊழியரின் வேலை.

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.(எசே 33:6)

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...