சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
துறையை நடத்தும் முறை
ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், ஜெம்ஸ் வெளியிடும் வி.சி.டிக்கள், பாடல் புத்தகங்கள் மற்றும் பிறவற்றை மக்களண்டை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை சகோதரர் ஞானராஜ் செய்துகொண்டிருந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கொடுக்கும் செய்திகளை பதிவு செய்யும் பொறுப்பும் அவருடையதாயிருந்தது. அந்நாட்களில், கேசட்டுகளிலேயே அதிகமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுவந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் சகோதரர் வழங்கும் செய்திகள், ஜெம்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள வேதாதகமக் கல்லூரி மற்றும் பிற பயிற்சி மையங்களில் சகோதரர் வழங்கும் செய்திகள் அத்தனையையும் அந்நாட்களில் பதிவு செய்தவர் அவரே. குடும்ப சூழ்நிலையின் நிமித்தமாக தமிழகம் செல்லும் நிலை உண்டானபோது, அப்பொறுப்பினை சகோதரர் நோபிள் கவனித்துவந்தார். சில நாட்களுக்குப் பின்னர், ஜெம்ஸ் மீடியா துறையில் ஆடியோ பிரிவும், வெளியீடுகளை விநியோகிக்கும் பிரிவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஆடியோ பிரிவின் பொறுப்பாளராக சகோதரர் நோபிள் நியமிக்கப்பட்டபோது, விநியோகிக்கும் பிரிவினைக் கவனிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, ஒருமுறை பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்தின் முன் வாசலில் சிறுவர் துறை அலுவலகத்தின் ஜன்னலை ஒட்டியவாறு நான் நின்றுகொண்டிருந்தபோது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வீட்டிலிருந்து தனது அலுவலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், வணக்கம் சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். சகோதரர் எனது அருகில் வந்ததும், நின்றவராக, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையின் விநியோகப் பிரிவின் பணிகளைக் குறித்துப் பேசினார். கேன்டீன் மற்றும் வெளியீட்டுத்துறை இவ்விரண்டையும் பிசினஸாச செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உண்டாகிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும்; இவ்விரண்டிலும் இந்த ஆபத்து உண்டு என்று சொன்னார். ஜனங்கள் பயன் பெறட்டும், அதுவே பிரதானமானது, இலாப நோக்கில் செயல்பட்டுவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு, தனது அலுவலகத்தை நோக்கி விரைந்தார். அப்போது, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையை நடத்தும் முறை எனக்கு விளங்கியது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக