முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியாச் செய்தீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்    


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 51

சரியாச் செய்தீங்க


 

ஜார்க்ண்ட் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் என்னுமிடத்தில் படைமுயற்சிக் கூட்டங்கள் நடைபெறவிருந்தன. அப்பகுதியின் சபையைச் சேர்ந்த மூத்தோரும், போதகரும், விசுவாசிகளும் இணைந்து அக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். அந்நாட்களில், படைமுயற்சிக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே, கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே குழுவினரோடும், ஜெனரேட்டர் பொருந்திய பேருந்தோடும் அப்பகுதிக்குச் நாங்கள் சென்றிருந்தோம். கூட்டம் தொடங்கியது, ஜனங்கள் திரளாக வந்து தேவ வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பிசாசின் பிடியிலிருந்த பலர் அப்போது விடுதலையும் பெற்றனனர். கூட்டம் நடத்துவதற்காக மின்சார இணைப்பு ஏதும் கிடைக்காததினால், நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் மூலமாகவே கூட்டத்தினை நடத்திக்கொண்டிருந்தோம். இறுதி நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜெனரேட்டர் திடீரென பழுதானது; ஜெனரேட்டரின் டீசல் தொட்டியிலிருந்து எஞ்சினுக்கு வரும் டீசல் திடீரென அளவு குறையத் தொடங்கியது. காரணத்தை அறிய முற்பட்டபோது, இடையில் உள்ள பில்டரில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அப்போது எங்களிடத்தில் மாற்று பில்டரும் இல்லாதிருந்தது. ஜெனரேட்டர் வாகனத்தை ஓட்டிவந்தவரும், ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தவருமான ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் அகஸ்டின் (அகஸ்டின் ஜெபக்குமார் அல்ல, மீடியா துறையின் ஊழியர்) ஜெனரேட்டரில் உண்டான பழுதினை என்னிடம் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் அவர் தனது கைகளால் பம்ப் செய்தவாறு ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த ஊழியர் என்னிடத்தில், 'கிருபாகரன் அண்ணன், என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டார். ஜெனரேட்டர் நின்றுவிட்டால் கூட்டம் முழுவதும் தடைபட்டுவிடும், பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டினால், ஜெனரேட்டரின் எஞ்சினே பழுதாகிவிடும் நிலை ஏற்படும், அது மிகுந்த செலவை உண்டாக்கிவிடும். ஜனங்களோ ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், சகோதரர் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். இதனைக் கண்ட நான் பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டும்படி சொன்னேன். அப்படியே கூட்டம் முடியும் வரை ஜெனரேட்டர் ஓடியது. கூட்டத்தின் முடிவில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்த நான், 'அண்ணன், ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது, எனவே செய்யக்கூடாத ஒன்றை அப்போது செய்துவிட்டேன், கூட்டம் தடைபட்டுவிடக்கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன்' என்று சொன்னேன். அப்போது சகோதரர், 'கிருபா, நீங்க சரியாகச் செய்தீங்க, அப்படித்தான் செய்யவேண்டும், சூழ்நிலையினைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்' என்று சொன்னார். சகோதரரின் குறி ஜனங்கள் மீதுதான், ஜெனரேட்டர் மீது அல்ல என்பது எனக்கு அப்போது தென்பட்டது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...