முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகவீனத்திலும் சுகம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 32

சுகவீனத்திலும் சுகம்


 

சில வருடங்களுக்கு முன்னர், ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சுகவீனமடைந்திருந்த நேரத்தில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், சகோதரரைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்திற்கு உடன் ஊழியர்களுடன் சென்றிருந்தேன் நான். வீட்டில், சகோதரர் படுக்கை அறையில் இருப்பதை அறிந்து உள்ளே நுழைந்தோம்; படுக்கை அறையிலோ, சகோதரர் சென்னை செல்லப் புறப்பட்ட நிலையில், படுக்கையில்; குப்புறப் படுத்த வண்ணமாக, நெஞ்சுப் பகுதியில் தலையணை ஒன்றை வைத்து கைகளால் அதனைப் பிடித்துக்கொண்டிருந்தவாறு படுத்திருந்தார். வழக்கமாக ஜெம்ஸ் வளாகத்தில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டுக்கொண்டிருந்த சகோதரரை அந்நிலையில் காண்பது எனக்குச் சற்று கடினமாகவே இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும், அவரைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். அப்போது, சகோதரர் மெல்ல கண் திறந்து எங்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். சகோதரர் மூச்சு விடச் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருந்தது பேச்சின் போது எங்களுக்குத் தெரிந்தது. அவரிடம் அதிகம் பேச்சுக் கொடுப்பது இந்நிலையில் நல்லதல்ல என்ற எண்ணத்தோடு மௌனமாக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சகோதரரின் சுகவீனத்தை அறிந்த ஊழியர்கள், பங்காளர்கள் ஜெபிக்கும் செய்தி அவ்வப்போது எங்கள் காதுகளை வந்து எட்டியவாறு இருந்தது. அப்போது நான் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டின் ஜெம்ஸ் முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஆசீர்வாதம் அவர்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு மீண்டும் சகோதரரைக் காண உள்ளே நுழைந்தேன். சகோதரரை சுகவீனமான நிலையில் கண்ட நான், 'அண்ணன், உங்கள் சுகவீனத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு கூட்டங்களைத் தள்ளிப் போடலாமே' என்று சொன்னேன். அதற்கு சகோதரர், 'சுகவீனம் என்பது உண்மைதான், ஆனால் நான் வருவேன் என்று அநேகர் காத்துக்கொண்டிருப்பார்களே, அவர்களை நான் ஏமாற்றக்கூடாதல்லவா' என்று சொன்னார். சுகவீனத்தின் மத்தியிலும், சுவிசேஷம் அறிவிப்பதே சுவிசேஷகனுக்குச் சுகம் என்ற செய்தி அப்போது படுக்கை அறையில் சகோதரர் எனக்கு மறைமுகமாகச் செய்த பிரசங்கம்.  

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...