முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

0.00000000001%

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 28

0.00000000001%


 

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் ஒருமுறை மிஷனரி தரிசனக் கூட்டம் நடைபெற்றது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். கோடைகால விடுமுறைக்காக பீஹாரிலிருந்து சாயர்புரம் வந்திருந்த நான் அக்கூட்டங்களில் பங்கேற்றேன். பீஹாரிலிருந்து வருகைதந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், திரு.அல்பர்ட் பால் ஆசிரியர் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார். சகோதரரை அவ்வப்போது சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நாள் மாலைக் கூட்டத்திற்கு சகோதரர் புறப்படும்போதும், வீட்டிலிருந்து சகோதரரை மைதானத்திற்கு அழைத்துவரும் பொறுப்பும், பிரசங்கத்தின்போது மேடையில்அமர்ந்து வேதவசனம் வாசிக்கும் பொறுப்பும் என்னுடையதாயிருந்தது. அந்நாட்களில், சாயர்புரத்திலுள்ள நண்பர்கள் ஜெப ஐக்கியத்தையும் அதன் வாலிபர்களைக் குறித்தும் சகேதாதரரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன்; வாலிபர்களை சகோதரருக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் விரும்பினேன். ஒருநாள், மாலையில் திரு.அல்பட் பால் ஆசிரியர் அவர்களின் வீட்டில் நண்பர்களைச் சந்திக்க விருப்பம் கொண்ட சகோதரரைத் தேடி நண்பர்கள் வந்து சேர்ந்தனர். வாலிபர்களால் உயர்ந்தவராக மதிக்கப்படுபவராயிருந்தபோதிலும், 'உங்களில் ஒருவன்' என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள, கட்டிய லுங்கியுடன் வந்து அமர்ந்தார் சகோதரர். ஆவலுடன் எதிரே அமர்ந்திருந்த வாலிபர்களைப் பார்த்து, 'எனக்கு வேதத்தில், 0.00000000001% தான் தெரியும், தேவன் கற்றுக்கொடுக்கக் கற்றுக்கொடுக்கக் கற்றுக்கொள்கிறேன்; எனக்குத் தெரிந்ததிலிருந்து உங்களுக்குப் பதில் சொல்லுகிறேன் என்று ஆரம்பித்த சகோதரர், வாலிபர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்; அப்போது, அவர் தேவனிடம் கற்றுக்கொண்டதின் பெலன் எங்களுக்குத் தெரிந்தது.

உரையாடலுக்குப் பின்னர் சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, இந்த வாலிபர்கள் எங்கே கூடுகிறார்கள்?' என்று கேட்டார்; சாயர்புரத்தை ஒட்டிய, செந்தியம்பலத்திற்கு (எனது சொந்த ஊர்) வடக்கே உள்ள 'தேரியில்' (ஊருக்கு வெளிப்புறத்தில் காட்டுப்பகுதியில்) என்று பதில் சொன்னேன்; ஏதாவது அலுவலகம் இல்லையா? என்று கேட்டார்; 'இல்லை' என்று பதில் சொன்னேன். 'ஏதாவது ஒரு இடம் இவர்களுக்கென்று இருந்தால் நன்றாயிருக்கும்' என்று ஆலோசனை கூறினார். கூட்டங்கள் முடிந்து சில நாட்கள் கழிந்தது, நான் பீஹார் புறப்படவிருந்தேன், எனது மனதிலோ சகோதரர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன. சகோதரர் சொன்ன வார்த்தையில் ஏதோ காரணம் இருக்கிறது, அப்படியென்றால் கர்த்தரே அந்த அலுவலகத்திற்கான ஆயத்தத்தைச் செய்யட்டும் என்று ஜெபித்தவாறு, சாயர்புரத்தில் உள்ள ஓர் வீட்டை அலுவலகத்திற்காக வாடைக்கு எடுக்க முயன்றேன்; அதற்கான முன்பணமான ரூ.500 அப்போது என்னிடம் இல்லை. நான் பீஹாருக்குப் புறப்படும் முந்தைய நாள் இரவில் செபத்தையாபுரத்தைச் சேர்ந்த சகோதரர் ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து என்னை ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்; சென்று ஜெபித்துவிட்டு, சகோதரர் கொடுத்த காணிக்கையினையும் பெற்றுக்கொண்டு, இரவில் வீடு திரும்பினேன். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதில் ரூபாய் 500 இருந்தது. அதுவே கர்த்தர் கொடுத்த அலுவலகத்திற்கான முன்பணம் என்பதை அறிந்துகொண்டேன். அடுத்த நாள் காலையில் பீஹார் புறப்படும்போது, நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் சகோதரர் காந்தியிடம் அதைக் கொடுத்தேன். அதுவே நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் முதல் அலுவலகம்.

வாலிபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடமிருந்து பதில் வந்தது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வாலிபர்களைப் பார்த்து கேட்ட கேள்விக்கு கர்த்தரிடமிருந்து பதில் வந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 7 இது தமிழ்நாடு இல்ல; பீஹார்   ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான்,  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச்...